< Back
கால்பந்து
தூரந்து கோப்பை கால்பந்து: 23 ஆண்டுக்கு பிறகு மகுடம் சூடியது மோகன் பகான்
கால்பந்து

தூரந்து கோப்பை கால்பந்து: 23 ஆண்டுக்கு பிறகு மகுடம் சூடியது மோகன் பகான்

தினத்தந்தி
|
4 Sept 2023 2:45 AM IST

கொல்கத்தாவைச் சேர்ந்த மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்து மகுடம் சூடியது.

24 அணிகள் இடையிலான 132-வது தூரந்து கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் கொல்கத்தாவில் நேற்று அரங்கேறிய பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்து மகுடம் சூடியது. இத்தனைக்கும் 62-வது நிமிடத்தில் அனிருத் தபா சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் 10 வீரர்களுடன் நெருக்கடியை சமாளித்த மோகன் பகான் அணியில், 71-வது நிமிடத்தில் டிமிட்ரி பெட்ராடோஸ் (ஆஸ்திரேலியா) வெற்றிக்குரிய கோலை நீண்ட தூரத்தில் இருந்து அடித்து பிரமாதப்படுத்தினார். இந்த பட்டத்தை மோகன் பகான் அணி வெல்வது 2000-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் 17-வது முறையாக கோப்பையை கையில் ஏந்தியுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்ற சென்னையின் எப்.சி. கால்இறுதியுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்