< Back
கால்பந்து
சிறந்த கால்பந்து வீரர் விருது போட்டியில் மெஸ்சி, எம்பாப்பே; ரொனால்டோ பெயர் பரிந்துரைக்கப்படவில்லை
கால்பந்து

சிறந்த கால்பந்து வீரர் விருது போட்டியில் மெஸ்சி, எம்பாப்பே; ரொனால்டோ பெயர் பரிந்துரைக்கப்படவில்லை

தினத்தந்தி
|
16 Sept 2023 4:36 AM IST

போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ பெயர் இந்த முறை விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.

நியூயார்க்,

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது பட்டியலை பிபா நேற்று வெளியிட்டது. ஆண்கள் பிரிவில் அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே, எர்லிங் ஹாலன்ட் (நார்வே), டெக்லன் ரைஸ் (இங்கிலாந்து) உள்பட 12 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ பெயர் இந்த முறை பரிந்துரைக்கப்படவில்லை.

இதே போல் சிறந்த கால்பந்து வீராங்கனை விருது பிரிவில், சமீபத்தில் உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில் அங்கம் வகித்த ஜெனிபர் ஹெர்மோசா, பொன்மதி, சல்மா பாருலுலோ, மாபி லியோன், ஆஸ்திரேலியாவின் சாம் கெர் உள்பட 16 பேர் இடம் பிடித்துள்ளனர்.

இவர்களில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனை தேசிய அணிகளின் பயிற்சியாளர்கள், கேப்டன்கள், பத்திரிகையாளர், ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் செய்திகள்