அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட மெஸ்ஸி முடிவு
|அர்ஜென்டினா கால்பாந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, பிரான்சின் பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகினார்.
பாரீஸ்,
கால்பந்து உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டன் 35 வயதான லயோனல் மெஸ்சி பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார் . அண்மையில் அவர் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி சவுதிஅரேபியாவுக்கு சென்று வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மெஸ்ஸி பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு விலகினார். இதனை தொடர்ந்து அவர் எந்த அணியில் இணைவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
இந்த சூழலில், பிரான்சின் பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகியதை தொடர்ந்து, அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளேன் என்று மெஸ்ஸி தெரிவித்து உள்ளார்.
சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து அணியின் ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மெஸ்ஸி நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.