< Back
கால்பந்து
எம்பாப்பேக்கு நான்காவது முறையாக சிறந்த கால்பந்து  வீரர் விருது

AFP

கால்பந்து

எம்பாப்பேக்கு நான்காவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருது'

தினத்தந்தி
|
30 May 2023 12:59 PM IST

பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி 11ஆவது பிரெஞ்சு பட்டத்தை வெல்வதற்கு உதவியதன் மூலம் கிலியன் எம்பாப்பே தொடர்ச்சியாக நான்காவது முறையாக சீசனின் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

பாரீஸ்,

31 ஆவது யூஎன்எபி கால்பந்து தொடருக்கான இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.இந்த ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மன் அணி 11ஆவது முறையாக கோப்பையை வெல்ல அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே பெரிதும் உதவினார்.இந்த தொடரில் மொத்தம் அவர் 28 கோல்கள் அடித்திருக்கிறார்.அவரே இந்த தொடருக்கான சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்..இந்த விருதை தொடர்ந்து 4 ஆவது முறையாக பெறுகிறார்.

1994 இல் இருந்து வழங்கப்பட்டு வரும் இவ்விருதை நான்கு முறை வென்றவர் இவரே,இதற்கு முன்னர் மூன்று முறை சிறந்த வீரர் விருது பெற்ற ஸ்லாடன் இப்ராஹிமோவிக்கை மிஞ்சியுள்ளார்.

விருது பெற்ற பிறகு 24 வயதான எம்பாப்பே கூறுகையில், "வீரர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

மேலும் அவர் கூறுகையில், நான் எப்போதும் வெற்றி பெறவே விரும்புகிறேன், லீக் வரலாற்றில் என் பெயரை எழுத விரும்புகிறேன். ஆனால் நான் கொண்டிருக்கும் அனைத்து லட்சியங்களுடனும் நான் இவ்வளவு விரைவாக வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை."என்று கூறியுள்ளார்.

எம்பாப்பே பிஎஸ்ஜி அணியுடன் 2024 வரை ஒப்பந்தம் செய்துள்ளார், அதை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க விருப்பம் உள்ளது என கூறியுள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்