< Back
கால்பந்து
மெஸ்சி அணிக்கு எதிரான போட்டி : காயம் காரணமாக ரொனால்டோ விலகல்

Image : AFP 

கால்பந்து

மெஸ்சி அணிக்கு எதிரான போட்டி : காயம் காரணமாக ரொனால்டோ விலகல்

தினத்தந்தி
|
1 Feb 2024 11:53 AM IST

இன்று நடைபெறும் போட்டியில் அல் நாசர் அணியை இன்டர் மியாமி எதிர்கொள்கிறது.

ரியாத்,

நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி, சவுதி அரேபியாவின் கிளப் அணிகளுக்கு எதிராக நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடி வருகிறது.

அதன்படி , கடந்த 29- ம் தேதி நடைபெற்ற போட்டியில் இன்டர் மியாமி - அல் ஹிலால் அணிகள் மோதின .இதில் 4-3 என்ற கோல் கணக்கில் அல் ஹிலால் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் போட்டியில் அல் நாசர் அணியை இன்டர் மியாமி எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் நட்சத்திர வீரரும் , அல் நாசர் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் லூயிஸ் காஸ்ட்ரோ கூறுகையில் ,

இப்போது ரொனால்டோ காயத்திலிருந்து மீண்டு வருகிறார் . இதனால் இந்த போட்டியில் ரொனால்டோ விளையாடவில்லை . விரைவில் அவர் அணியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்குவார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்