மேஜர் லீக் கால்பந்து தொடர்; மெஸ்சியின் இண்டர் மியாமி அணி வெற்றி
|மெஸ்சி இண்டர் மியாமி அணிக்காக மேஜர் லீக் கால்பந்து தொடரில் இன்று அறிமுகம் ஆனார் .
நியூஜெர்சி,
மேஜர் லீக் கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இண்டர் மியாமி அணிக்கான தனது முதல் போட்டியில் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி இன்று விளையாடினார்.
இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூயார்க் ரெட் புல்ஸ் மற்றும் இண்டர் மியாமி அணிகள் மோதின. இதில் முதலில் அறிவிக்கப்பட்ட பிளேயிங் அணியில் மெஸ்சி இடம்பெறவில்லை. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும் பிற்பாதி ஆட்ட நேரத்தில் மெஸ்சி மாற்றுவீரராக களம் இறங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் களம் இறங்கி அற்புதமாக கோல் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் இண்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூயார்க் ரெட் புல்சை வீழ்த்தி வெற்றி பெற்றது. இண்டர் மியாமி அணி தரப்பில் மெஸ்சி மற்றும் டியாகோ கோம்ஸ் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதன் மூலம் மெஸ்சி இண்டர் மியாமி அணிக்காக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் கோல் அடித்தவர் என்ற சிறப்புடன் வலம் வருகிறார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 11 கோல்கள் அடித்துள்ளார்.