< Back
கால்பந்து
2023-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லயோனல் மெஸ்சி..!

image courtesy; twitter/ @FIFAWorldCup

கால்பந்து

2023-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லயோனல் மெஸ்சி..!

தினத்தந்தி
|
16 Jan 2024 4:33 PM IST

மெஸ்சி இந்த விருதை தொடர்ந்து 2-வது முறையாக வென்று அசத்தியுள்ளார்.

லண்டன்,

லண்டனில் 2023-ம் ஆண்டுக்கான பிபா-வின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

இதில் சிறந்த வீரர் விருதை பெறுபவர் யார் என்பதில் மெஸ்சிக்கும், எர்லிங் ஹாலண்ட்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மெஸ்சி, ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்று அசத்தினார். இவர் இந்த விருதை தொடர்ந்து 2-வது முறையாக வென்று அசத்தியுள்ளார். மொத்தத்தில் மெஸ்சி இதுவரை 3-முறை ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

மேலும் சிறந்த கோல் கீப்பர் விருதை பிரேசில் வீரரான எடர்சனும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அயிட்டனா பொன்மதியும் வென்றனர்.

மேலும் செய்திகள்