< Back
கால்பந்து
கால்பந்து
கிங் கோப்பை கால்பந்து; அரையிறுதிக்கு ரொனால்டோ தலைமையிலான அல் நசீர் அணி தகுதி !
|12 Dec 2023 4:46 PM IST
ரொனால்டோ இந்த ஆட்டத்தில் அடித்த கோல் நடப்பு ஆண்டில் அவரது 50-வது கோலாக பதிவாகி உள்ளது.
ரியாத்,
கிங் கோப்பை கால்பந்து தொடர் சவூதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரொனால்டோ தலைமையிலான அல் நசீர் அணி, அல் ஷபாப் அணியுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே முன்னிலை பெற்ற அல் நசீர் 5-2 என்ற கோல் கணக்கில் அல் ஷபாப் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அல் நசீர் அணி தரப்பில் ரொனால்டோ, சாடியோ மேனி, அப்துல்ரஹ்மான் கரீப், முகமது மாறன் மற்றும் செகோ போபனா ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். அல் ஷபாப் அணி தரப்பில் கார்லோஸ் மற்றும் ஹட்டன் பஹேப்ரி ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.
ரொனால்டோ இந்த ஆட்டத்தில் அடித்த கோல் நடப்பு ஆண்டில் அவரது 50-வது கோலாக பதிவாகி உள்ளது.