< Back
கால்பந்து
கால்பந்து
கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து: சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மும்பை சிட்டி எப்.சி
|21 Jan 2024 9:40 PM IST
கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் நடைபெற்று வருகிறது
புவனேஸ்வர்,
கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஐஎஸ்எல் தொடரிலிருந்து 12 மற்றும் ஐ லீக்கிலிருந்து 4 என்று மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு ஆட்டம் ஒன்றில் மும்பை சிட்டி எப்.சி - சென்னையின் எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி அரையிறுதிக்கு முன்னேறியது.