கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து; ஒடிசா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஈஸ்ட் பெங்கால்
|ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
புவனேஸ்வர்,
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது அரையிறுதிக்கு முன்னேறிய ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி மற்றும் ஒடிசா ஆகிய 4 அணிகளில் இருந்து ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் பாதியில் 1-0 என ஒடிசா அணி முன்னிலை பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து 2-1 என ஈஸ்ட் பெங்கால் அணி முன்னிலை பெற்றது. ஈஸ்ட் பெங்கால் வெற்றி பெறும் என நினைத்த வேளையில் ஒடிசா அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-2 என ஆட்டத்தை சமன் செய்தது.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த நேரத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி கூடுதலாக ஒரு கோல் அடித்து 3-2 என முன்னிலை பெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.