< Back
கால்பந்து

கோப்புப்படம்
கால்பந்து
ஜூனியர் கால்பந்து லீக் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

16 Oct 2022 2:55 AM IST
ஜூனியர் கால்பந்து லீக் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது.
சென்னை,
முதலாவது சென்னை ஜூனியர் (13 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு) கால்பந்து லீக் போட்டி சென்னையை அடுத்த படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று தொடங்குகிறது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் நடக்கும் இந்த போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரம் வரை நடைபெறுகிறது. இந்துஸ்தான் பல்கலைக்கழகம், லியோ காபி ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் அசுரா எப்.சி., சென்னையின் எப்.சி., எப்.சி.மெட்ராஸ், கிரேட் கோல்ஸ், மஹோகானி எப்.சி., எஸ்.பி.எப்.ஏ. ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு 'ரவுண்ட் ராபின் லீக்' முறையில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்போர்ட்ஒராமா நிறுவனர் சமீர் பரத்ராம் செய்து வருகிறார்.