< Back
கால்பந்து
கால்பந்து
ஜோன் கேம்பர் டிராபி கால்பந்து: பார்சிலோனா அணியை வீழ்த்தி மொனாக்கோ சாம்பியன்
|13 Aug 2024 5:13 PM IST
ஜோன் கேம்பர் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் பார்சிலோனா அணி, மொனாக்கோ அணியை எதிர்கொண்டது.
பார்சிலோனா,
ஜோன் கேம்பர் டிராபி என்பது பார்சிலோனாவில் லா லிகா சீசன் தொடங்குவதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் வருடாந்திர கால்பந்து போட்டியாகும்.
இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பார்சிலோனா அணி, மொனாக்கோ அணியை எதிர்கொண்டது.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மொனாக்கோ 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. மொனாக்கோ தரப்பில் லமின் கமாரா, பிரீல் எம்போலோ மற்றும் கிறிஸ்டியன் தலா ஒரு கோல் அடித்தனர்.