ஐ.எஸ்.எல்.தொடர்; சென்னைக்கு 2வது வெற்றி கிடைக்குமா..? - ஐதராபாத்துடன் இன்று மோதல்
|ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது.
ஐதராபாத்,
இந்தியன் சூப்பர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது. இதில் 13 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தியது.
சென்னையில் நடந்த 2-வது லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் முகமதன் அணியிடம் தோல்வி கண்டது. இந்நிலையில், ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - ஐதராபாத் எப்.சி அணிகள் மோத உள்ளன.
சென்னை அணி ஐதராபாத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறுமா? என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் ஆடிய 2 ஆடங்களிலும் தோல்வி கண்டுள்ள ஐதராபாத் தனது முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது.