< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து அரையிறுதியில் ஒடிசா-மோகன் பகான் அணிகள் இன்று மோதல்
|28 April 2024 5:41 AM IST
10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.
கொல்கத்தா,
10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் அரையிறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ்- ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.
அரையிறுதியில் முதலாவது சுற்றில் ஒடிசாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்ற மோகன் பகான் அணி பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். அதே நேரத்தில் ஒடிசா அணி தனது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி 'டிரா' செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட முடியும். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.