< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை சிட்டி - மோகன் பகான் அணிகள் நாளை மோதல்
|3 May 2024 8:43 PM IST
ஐ.எஸ்.எல். தொடரில் நாளை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி - மோகன் பகான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
கொல்கத்தா,
12 அணிகள் பங்கேற்றிருந்த 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்களின் முடிவில் ஒடிசா எப்.சி. மோகன் பகான், எப்.சி கோவா, மும்பை சிட்டி எப்.சி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதியில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தி மோகன் பகான் அணியும், எப்.சி. கோவா அணியை வீழ்த்தி மும்பை சிட்டியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில் இந்த தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் மோகன் பகான் - மும்பை சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.