< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னையின் எப்.சி அணியில் இணையும் விக்னேஷ்
|16 Aug 2024 4:14 PM IST
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் அடுத்த மாதம் 13ம் தேதி தொடங்குகிறது.
சென்னை,
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் அடுத்த மாதம் 13ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி அணியில் பெங்களூருவை சேர்ந்த விக்னேஷ் தட்சிணாமூர்த்தி 4 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
26 வயதான விக்னேஷ் 2024-25-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியில் இணையும் 12-வது வீரர் ஆவார். இவர் 70 ஐ.எஸ்.எல் போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.