< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் - பெங்களூரு இடையிலான ஆட்டம் டிரா

Image Courtesy: @JamshedpurFC / @bengalurufc / @IndSuperLeague

கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் - பெங்களூரு இடையிலான ஆட்டம் டிரா

தினத்தந்தி
|
11 Feb 2024 9:55 PM IST

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஜாம்ஷெட்பூர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜே.ஆர்.டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் கால்பந்து ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி - பெங்களூரு எப்.சி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களூரு அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி பதில் கோல் திருப்பியது. மேற்கொண்டு கோல் அடிக்க இரு அணிகளும் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

மேலும் செய்திகள்