< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; பஞ்சாப் - ஒடிசா அணிகள் நாளை மோதல்..!

Image Courtesy: @OdishaFC / @RGPunjabFC

கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; பஞ்சாப் - ஒடிசா அணிகள் நாளை மோதல்..!

தினத்தந்தி
|
25 Dec 2023 12:32 PM GMT

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஓய்வு நாளாகும்.

இதையடுத்து நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - ஒடிசா அணிகள் மோத உள்ளன. தற்போது வரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் ஒடிசா அணி 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 11 ஆட்டங்களில் ஆடியுள்ள பஞ்சாப் அணி 1 வெற்றி, 5 டிரா, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்