< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பஞ்சாப் எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் இன்று மோதல்

கோப்புப்படம்

கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பஞ்சாப் எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
2 April 2024 6:56 AM IST

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

புவனேஸ்வர்,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் ஒடிசா அணி 19 ஆட்டங்களில் ஆடி 10 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி கண்டு 36 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

அதே வேளையில் பஞ்சாப் அணி 19 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 டிரா, 8 தோல்வி கண்டு 21 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்