< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நார்த் ஈஸ்ட் யுனைடெட்
|13 April 2024 9:38 PM IST
12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
கவுகாத்தி,
12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முதல் பாதியிலேயே 3 கோல்களை அடித்து அசத்தியது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
இறுதியில் இந்த ஆட்டத்தை 3-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி கைப்பற்றியது. இந்த தொடரில் நாளை கோவாவில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - கோவா எப்.சி அணிகள் மோத உள்ளன.