< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: மோகன் பகானை வீழ்த்தி மும்பை சிட்டி அணி சாம்பியன்

Image Courtesy: @IndSuperLeague

கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: மோகன் பகானை வீழ்த்தி மும்பை சிட்டி அணி 'சாம்பியன்'

தினத்தந்தி
|
5 May 2024 7:08 AM IST

10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது.

கொல்கத்தா,

10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், முன்னாள் சாம்பியனான மும்பை சிட்டி எப்.சி. அணியை சந்தித்தது.

இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் மோகன் பகான் அணியின் ஜேசன் கம்மிங்ஸ் 44வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். ஆனால் இந்த முன்னிலை சிறிது நேரமே நீடித்தது. 53வது நிமிடத்தில் மும்பை அணியின் ஜார்ஜ் பெரேரா தியாஸ் பதில் கோல் திருப்பி சமநிலையை ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து கடைசி கட்டத்தில் மும்பை அணி அடுத்தடுத்து 2 கோல் அடித்தது. அதாவது பிபின் சிங் தனோஜம் 81வது நிமிடத்திலும், ஜக்குப் வோஜ்டஸ் 90வது நிமிடத்திலும் கோல் போட்டனர். முடிவில் மும்பை அணி 31 என்ற கோல் கணக்கில் மோகன் பகானை சாய்த்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மும்பை அணிக்கு கோப்பையுடன் ரூ. 6 கோடியும், 2வது இடம் பிடித்து மோகன் பகான் அணிக்கு ரூ. 2½ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்