ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
|கொச்சியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - மோகன் பகான் அணிகள் மோதின.
கொச்சி,
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொச்சியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - மோகன் பகான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் மோகன் பகான் அணி சார்பில் அர்மாண்டோ சாதிகு ஆட்டத்தின் 4 மற்றும் 60-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். மேலும், தீபக் டாங்ரி ஆட்டத்தின் 68-வது நிமிடத்திலும் ஜேசன் கம்மிங்ஸ் 90+7 வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் விபின் மோகனன் ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். திமித்ரியோஸ் ஆட்டத்தின் 63 மற்றும் 90+9 வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். இதையடுத்து ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 4-3 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.