ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி 6வது வெற்றியை பதிவு செய்த மோகன் பகான்..!
|10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
கவுகாத்தி,
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.
இந்த போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள மோகன் பகான் அணியும், 7-வது இடத்தில் உள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நார்த் ஈஸ்ட் யுனைடெட் முதல் கோலை அடித்தது. இதையடுத்து 0-1 என பின்தங்கிய மோகன் பகான் அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து முதல் பாதியில் 2-1 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்திலும் மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்தது.
இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி தனது 6வது வெற்றியை பதிவு செய்தது.