< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்திய மோகன் பகான்
|24 Sept 2024 7:47 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் - மோகன் பகான் அணிகள் மோதின.
கொல்கத்தா,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி - மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2ம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மோகன் பாகன் அணியினர் மேலும் இரண்டு கோல் அடித்தனர்.
இதனால் மோகன் பகான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதியில் இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணியை வீழ்த்தி மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட் அணி வெற்றி பெற்றது.