< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; சென்னையின் எப்.சி. அணியில் மொபாஷிர் சேர்ப்பு..!
|9 Jan 2024 7:08 AM IST
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சென்னை,
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி இந்த சீசனில் இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 டிரா, 6 தோல்வி கண்டு 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் எஞ்சிய லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக பரிமாற்றம் அடிப்படையில் ஈஸ்ட் பெங்கால் அணியில் இருந்து நடுகள வீரர் மொபாஷிர் ரகுமானை சென்னையின் எப்.சி. வாங்கியுள்ளது. ஜார்கண்டை சேர்ந்த 25 வயதான மொபாஷிர் ரகுமான், 2018-ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.எல்.போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.