< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளா பிளாஸ்டர்ஸ் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்
|3 April 2024 8:11 AM IST
12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
புவனேஸ்வர்,
12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கேரளாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோத உள்ளன.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கேரளா 19 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 டிரா, 7 தோல்வி கண்டு 30 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
அதேவேளையில் 19 ஆட்டங்களில் ஆடியுள்ள ஈஸ்ட் பெங்கால் 4 வெற்றி, 6 டிரா, 9 தோல்வி கண்டு 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டையலில் 11வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.