< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்;  ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் நாளை மோதல்

Image Courtesy: @NEUtdFC

கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் நாளை மோதல்

தினத்தந்தி
|
30 Jan 2024 8:33 AM GMT

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இந்நிலையில் கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றதை முன்னிட்டு கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல் இன்று வரை ஐ.எஸ்.எல்.தொடர் நடைபெறவில்லை.

இந்நிலையில் கலிங்கா சூப்பர் கோப்பை தொடர் நிறைவடைந்ததை அடுத்து நாளை முதல் ஐ.எஸ்.எல் தொடர் நடைபெற உள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன.

மேலும் செய்திகள்