< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பெங்களூரு - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்..!
|24 Dec 2023 2:34 PM IST
இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் கேரளா - மும்பை அணிகள் மோத உள்ளன.
பெங்களூரு,
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
அதில் மாலை 5.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பெங்களூரு - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் கேரளா - மும்பை அணிகள் மோத உள்ளன.