< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; பெங்களூரு எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @IndSuperLeague

கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; பெங்களூரு எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
30 March 2024 1:53 PM IST

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன.

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுமார் 15 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் இந்த தொடர் இன்று மீண்டும் தொடங்குகிறது.

அதன்படி இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை 5 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் மோத உள்ளன. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ஒடிசா 18 ஆட்டங்களில் ஆடி 10 வெற்றி, 5 டிரா, 3 தோல்வி கண்டு 35 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 19 ஆட்டங்களில் ஆடியுள்ள பெங்களூரு 5 வெற்றி, 6 டிரா, 8 தோல்வி கண்டு 21 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தை அடுத்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கேரளா 18 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 2 டிரா, 7 தோல்வி கண்டு 29 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 19 ஆட்டங்களில் ஆடியுள்ள ஜாம்ஷெட்பூர் அணி 5 வெற்றி, 5 டிரா, 9 தோல்வி கண்டு 20 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்