< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஐதராபாத்தை வீழ்த்திய பெங்களூரு எப்.சி
|20 Sept 2024 6:54 AM IST
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
பெங்களூரு,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு பெங்களூருவில் நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பெங்களூரு எப்.சி. - ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு எப்.சி. 3-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி.யை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது.
ராகுல் பேகே (5வது நிமிடம்) ஒரு கோலும், சுனில் சேத்ரி (85 மற்றும் 90+4வது நிமிடம்) 2 கோலும் அடித்தனர். இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.