< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: 2-வது அரையிறுதியின் முதலாவது சுற்றில் மும்பை அணி வெற்றி

image courtesy: twitter/@IndSuperLeague

கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: 2-வது அரையிறுதியின் முதலாவது சுற்றில் மும்பை அணி வெற்றி

தினத்தந்தி
|
25 April 2024 9:31 AM IST

ஐ.எஸ்.எல். தொடரின் 2-வது அரையிறுதியின் முதலாவது சுற்றில் எப்.சி. கோவா- மும்பை சிட்டி அணிகள் மோதின.

கோவா,

12 அணிகள் கலந்து கொண்ட ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்களின் முடிவில் ஒடிசா எப்.சி. மோகன் பகான், எப்.சி கோவா, மும்பை சிட்டி எப்.சி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இரண்டு சுற்றுகளாக நடக்கும் அரையிறுதி ஆட்டங்களில் முறையே ஒடிசா எப்.சி - மோகன் பகான், எப்.சி கோவா- மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோத உள்ளன.

இதில் அரையிறுதியின் முதல் சுற்று போட்டியில் மோகன் பகான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஒடிசா எப்.சி வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்றிரவு கோவாவில் நடந்த 2-வது அரையிறுதியின் முதலாவது சுற்றில் எப்.சி. கோவா- மும்பை சிட்டி அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி 3-2 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவாவை வீழ்த்தியது.

இவ்விரு அணிகளும் மீண்டும் அரையிறுதியின் 2-வது சுற்றில் வருகிற 29-ந் தேதி மும்பையில் சந்திக்கின்றன. இதில் மும்பை அணி 'டிரா' செய்தாலே இறுதிப்போட்டியை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்