< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்
|29 Dec 2023 6:26 AM IST
இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஒடிசா - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.
புவனேஸ்வர்,
12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்றைய ஆட்டங்களில் மாலை 5.30 மணிக்கு புவனேஸ்வரில் நடைபெறும் போட்டியில் ஒடிசா - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 8 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - எப்.சி. கோவா அணிகள் சந்திக்கின்றன.