< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து; ஒடிசா - கேரளா ஆட்டம் டிரா

Image Courtesy: @IndSuperLeague

கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து; ஒடிசா - கேரளா ஆட்டம் 'டிரா'

தினத்தந்தி
|
4 Oct 2024 6:29 AM IST

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

புவனேஷ்வர்,

இந்தியன் சூப்பர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஒடிசாவில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. இதனால் முதல் பாதி ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2ம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தன. ஆனால் 2ம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இறுதியில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் முடிந்தது. இந்த தொடரில் இன்று கோவாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்