< Back
கால்பந்து
ஐஎஸ்எல் கால்பந்து ; நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பெங்களூரு அணிகள் இன்று மோதல்

image courtesy; twitter/ @IndSuperLeague

கால்பந்து

ஐஎஸ்எல் கால்பந்து ; நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பெங்களூரு அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
26 Nov 2023 6:13 PM IST

நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கேரளா 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

கவுகாத்தி,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கொண்டு கடந்த 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இடைவெளி விடப்பட்டது.

இந்நிலையில் இடைவெளி முடிவடைந்து மீண்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெற உள்ள முதலாவது ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும், 8-வது இடத்தில் உள்ள பெங்களூரு அணியும் மோத உள்ளன.

முன்னதாக நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கேரளா 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

மேலும் செய்திகள்