< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதியில் மும்பை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதியில் மும்பை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
12 March 2023 4:17 AM IST

சொந்த மண்ணில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.

பெங்களூரு,

9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதன் அரைஇறுதிப்போட்டி இரண்டு ஆட்டங்கள் கொண்டதாகும்.

இதில் பெங்களூரு கன்டீவரா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுகிழமை) இரவு நடைபெறும் முதலாவது அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பெங்களூரு எப்.சி.-மும்பை சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பையில் நடந்த அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தி இருந்தது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்