< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை- ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை- ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
4 April 2024 2:52 AM IST

சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி., ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி., ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் ஏற்கனவே இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது. 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாகும்.

சென்னை அணி இதுவரை 19 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 'டிரா', 10 தோல்வி என 21 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், ஜாம்ஷெட்பூர் 5 வெற்றி, 6 'டிரா', 9 தோல்வி என 21 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் இருக்கிறது.

மேலும் செய்திகள்