< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் மந்தர் ராவ்
|17 Jun 2024 12:02 PM IST
மந்தர் ராவ் ஏற்கனவே மும்பை சிட்டி, எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் அணிக்காக ஆடியுள்ளார்.
சென்னை,
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னையின் எப்.சி. அணியில் கோவாவைச் சேர்ந்த மந்தர் ராவ் தேசாய் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
32 வயது பின்கள வீரரான மந்தர் ராவ் 2024-25-ம் ஆண்டு சென்னையின் எப்.சி.யில் இணையும் 7-வது வீரர் ஆவார். அவர் ஏற்கனவே மும்பை சிட்டி, எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் அணிக்காக ஆடியுள்ளார்.
155 ஐ.எஸ்.எல். ஆட்டங்களில் ஆடிய அனுபவசாலியான மந்தர்ராவ், 2021-ம் ஆண்டு தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.