< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஐதராபாத் அசத்தல் வெற்றி
|13 Oct 2022 9:57 PM IST
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் எப்.சி அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
கவுகாத்தி,
11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, சென்னை, மும்பை உள்பட 11 நகரங்களில் அரங்கேறுகிறது. அந்த வகையில் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின.
இந்த போட்டியில் ஐதராபாத் அணி 3-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி தரப்பில் பார்தோலோமிவ் (13-வது நிமிடம்), ஹலீச்சரன் (69-வது நிமிடம்), போர்ஜா (73-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.