< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்- மோகன் பகான் ஆட்டம் டிரா
|10 March 2023 12:22 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத்- மோகன் பகான் அணிகளின் ஆட்டம் டிராவானது.
ஐதராபாத்,
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், ஐதராபாத் எப்.சி.- ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் இடையிலான 2-வது அரைஇறுதியின் முதலாவது சுற்று ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்தது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இலக்கை நோக்கி மொத்தம் 10 ஷாட்டுகள் அடிக்கப்பட்ட போதிலும் ஒன்றும் கோலாகவில்லை. முடிவில் கோலின்றி (0-0) டிராவில் முடிந்தது. இவ்விரு அணிகளும் 13-ந்தேதி 2-வது சுற்றில் மீண்டும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.