< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி

Image Tweeted By IndSuperLeague

கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி

தினத்தந்தி
|
3 Nov 2022 9:53 PM IST

கோவாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் -எப்.சி கோவா அணிகள் மோதின.

கோவா,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கோவாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் -எப்.சி கோவா அணிகள் மோதின.

போட்டி தொடங்கிய 2-வது நிமிடத்திலே கோவா வீரர் இக்கீர் குரரோடஸேன அந்த அணியின் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 12-வது நிமிடத்தில் கோவா அணி 2-வது கோலையும் அடித்து தொடக்கம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது.

ஜாம்ஷெட்பூர் வீரர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் கோல் அடக்க முடியவில்லை. மாறாக கோவா வீரர் பிரிசன் பெர்னாண்டஸ் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அந்த அணிக்கு 3-வது கோலை அடித்தார். இதன் மூலம் இறுதியில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்