ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா
|கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
கொல்கத்தா,
11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் கிளெய்ட்டன் சில்வா ஆட்டத்தின் 10 மற்றும் 64-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். ஜேக் ஜெர்விஸ் ஆட்டத்தின் 45+2 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் சுந்தர் கோகோய் ஆட்டத்தின் 30-வது நிமிடத்திலும் ஜிதின் ஆட்டத்தின் 32-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். மேலும், இம்ரான் கான் ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்திருந்தனர். இதையடுத்து ஈஸ்ட் பெங்கால்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.