< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் இருந்து விடைபெற்றார் கிரிவெல்லாரோ

கோப்புப்படம்

கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் இருந்து விடைபெற்றார் கிரிவெல்லாரோ

தினத்தந்தி
|
29 May 2024 6:39 AM IST

சென்னையின் எப்.சி. அணியில் இடம்பிடித்திருந்த ரபேல் கிரிவெல்லாரோ நேற்று அணியில் இருந்து விடைப்பெற்றார்.

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணியில் இடம்பிடித்திருந்த நடுகள வீரர் 35 வயதான ரபேல் கிரிவெல்லாரோ (பிரேசில்) நேற்று அணியில் இருந்து விடைப்பெற்றார்.

அவர் சென்னை அணிக்காக ஆடிய 54 ஆட்டங்களில் 14 கோல் அடித்திருப்பதுடன், 16 கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். இதே போல் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்.சி. அணியின் நடுகள வீரர் வினித் ராயின் ஒப்பந்தம் காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது என்பதால் அவரும் மும்பை அணியில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்