< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணிக்கு ஆறுதல் வெற்றி

கோப்புப்படம் 

கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணிக்கு ஆறுதல் வெற்றி

தினத்தந்தி
|
25 Feb 2023 2:21 AM IST

இன்றைய ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்- ஏ.டி.கே. மோகன் பகான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

சென்னை,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி தனது கடைசி லீக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் சந்தித்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் சென்னையின் எப்.சி. 4-3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றது.

சென்னை அணியில் ரஹிம் அலி (3-வது நிமிடம்), கிவாமி கரிகாரி (56-வது நிமிடம்), கேப்டன் அனிருத் தபா (62-வது நிமிடம்), சஜல் பாக் (90-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். ஒரு கட்டத்தில் ஆட்டம் 3-3 என்று டிராவை நோக்கி நகர்ந்த போது, கடைசி நிமிடத்தில் 19 வயதான சஜல் பாக் அடித்த கோல் சென்னைக்கு வெற்றியை தேடித்தந்தது.

லீக் சுற்றை முடித்து விட்ட சென்னையின் எப்.சி. அணி 7 வெற்றி, 6 டிரா, 7 தோல்வி என்று மொத்தம் 27 புள்ளிகளுடன் இந்த சீசனில் 8-வது இடத்தை பிடித்தது. ஒரு வெற்றி, 2 டிரா, 17 தோல்வி என்று 5 புள்ளி மட்டுமே பெற்றுள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

இன்றைய ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்- ஏ.டி.கே. மோகன் பகான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்