< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி சென்னை அணி வெற்றி
|4 Nov 2022 10:21 PM IST
சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கொல்கத்தா,
11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி ஈஸ்ட் பெங்காலை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில் 2-வது பாதியில் சென்னை வீரர் வாபா ஹகாமென்ஷி (69-வது நிமிடம்) கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி 7 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.