< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் கொலம்பியா வீரர் ஒப்பந்தம்
|12 Jun 2024 1:44 AM IST
சென்னையின் எப்.சி. அணியில் கொலம்பியாவைச் சேர்ந்த வில்மர் ஜோர்டான் கில் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணியில் கொலம்பியாவைச் சேர்ந்த வில்மர் ஜோர்டான் கில் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வில்மர் ஜோர்டான் கில் 2024-25-ம் ஆண்டு சீசனுக்காக சென்னை அணியில் இணையும் 3-வது வெளிநாட்டு வீரர் ஆவார். அவர் 2022-ம் ஆண்டு நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியிலும், 2023-ம் ஆண்டு பஞ்சாப் எப்.சி. அணியிலும் விளையாடி இருந்தார்.
வில்மர் ஜோர்டான் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இதுவரை 26 ஆட்டங்களில் ஆடி 16 கோல் அடித்துள்ளார்.