ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியிடம் சென்னை தோல்வி
|கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய கோவா அணிக்கு இது 13-வது வெற்றியாகும்.
கோவா,
10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கோவாவில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி., எப்.சி. கோவாவை சந்தித்தது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்ட இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் கோவா அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையை தோற்கடித்தது. கோவா அணியில் கார்லஸ் மார்டினஸ் (38-வது, 72-வது நிமிடம்) 2 கோலும், போர்ஜா ஹெர்ரிரா (33-வது நிமிடம்), பிரண்டன் பெர்னாண்டஸ் (45-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். சென்னை அணி தரப்பில் ரஹிம் அலி (13-வது நிமிடம்) ஒரு கோல் போட்டார். கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய கோவா அணிக்கு இது 13-வது வெற்றியாகும். சென்னை அணிக்கு 11-வது தோல்வியாகும்.
இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.