< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சென்னையின் எப்.சி.
|14 Sept 2024 7:37 PM IST
இன்று நடைபெறுகின்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு - ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடுகின்றன.
புவனேஸ்வர்,
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதன் முதலாவது ஆட்டத்தில் மும்பை சிட்டி - மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதனையடுத்து இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி முதலாவது ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - ஒடிசா அணிகள் மோதின.
இரு அணிகளும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும் சென்னை அணி முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. சென்னை தரப்பில் பரூக் சவுத்ரி 2 கோல்களும், டேனியல் சீமா ஒரு கோலும் அடித்தனர்.
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு - ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடி வருகின்றன.