< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி
|18 Jan 2023 10:04 PM IST
ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு அணிகள் மோதின.
ஜாம்ஷெட்பூர்,
11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர்-பெங்களூரு அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பில் ரோகித் குமார் ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 34-வது நிமிடத்திலும் சிவசக்தி நாராயணன் ஆட்டத்தின் 62-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஜாம்ஷெட்பூர் அணி எந்த கோலும் அடிக்கவில்லை.
இறுதியில் ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.