< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: தொடக்க போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அசத்தல் வெற்றி

Image Tweeted By @KeralaBlasters

கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: தொடக்க போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அசத்தல் வெற்றி

தினத்தந்தி
|
7 Oct 2022 10:07 PM IST

கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கொச்சி,

9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் இன்று கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில் 2-வது பாதியில் போட்டியின் 72-வது நிமிடத்தில் கேரளா வீரர் அட்ரியன் லூனா அந்த அணியின் முதல் கோலை அடித்தார். அதை தொடர்ந்து கேரளா அணியின் இவான் கல்யுஸ்னி 82-வது நிமிடத்தில் அந்த அணியின் 2-வது கோலை அடித்தார்.

இதற்கு பதில் கோலாக பெங்கால் அணியின் அலெக்ஸ் 88-வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் போட்டியிலே மிகுந்த பரபரப்பு நிலவியது. இரு அணிகளும் இடையிலான 1 கோல் மட்டுமே வித்தியாசம் இருக்க 89-வது நிமிடத்தில் இவான் கல்யுஸ்னி மீண்டும் கோல் அடித்து கேரளா அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்