< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல் கால்பந்து : ஜிதேந்திர சிங்கை தக்க வைத்தது ஜாம்ஷெட்பூர் அணி

Image Tweeted By @JamshedpurFC

கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து : ஜிதேந்திர சிங்கை தக்க வைத்தது ஜாம்ஷெட்பூர் அணி

தினத்தந்தி
|
26 July 2022 7:17 PM IST

ஜாம்ஷெட்பூர் அணி மிட்பீல்டர் ஜிதேந்திர சிங்கை தக்க வைத்துள்ளது.

ஜாம்ஷெட்பூர்,

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் ஜாம்ஷெட்பூர் அணி மிட்பீல்டர் ஜிதேந்திர சிங்கை தக்க வைத்துள்ளது. இவர் கடந்த அணி ஜாம்ஷெட்பூர் அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கினார். எதிராணிகளின் பல முக்கிய கோல்களை தடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார். இதனால் மே 2024 ஆம் ஆண்டு வரை ஜிதேந்திர சிங்கை ஜாம்ஷெட்பூர் அணி தக்க வைத்துள்ளது.

அணியில் தக்கவைக்கப்பட்டது குறித்து ஜிதேந்திர சிங் கூறுகையில், "ஜாம்ஷெட்பூர் எப்சியில் எனது ஒட்டுமொத்த அனுபவம் என்னை ஒரு சிறந்த மிட்பீல்டராக வடிவமைத்துள்ளது. ஜாம்ஷெட்பூர் அணிக்காக மீண்டும் விளையாடுவதற்கு ஆவலாக உள்ளேன். மேலும் அணி சிறந்த வெற்றிகளை பெற உதவுவேன்" என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்